உள்நாடு

பாகிஸ்தானில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் மூன்று மாணவர்கள் சாதனை

பாகிஸ்தானில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தான் – கராச்சியில் அமைந்துள்ள “ஜாமிஆ பின்னூரிய்யா” வில், இக்குர்ஆன் மனன “ஹிஃப்ழ் போட்டி” நடைபெற்றது.


பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியிலேயே, முதல் மூன்று இடங்களையும் இலங்கை மாணவர்கள் வென்று கொடுத்துள்ளனர்.


இதன்பிரகாரம், முதலாம் இடத்தை – முஹம்மத் பின் அஜ்வாத் – அக்குரணை “உஸ்வதுல் ஹஸனாஹ்” அரபுக் கலாபீட மாணவரும், இரண்டாம் இடத்தை முஹம்மத் ஸாஜித் பின் முஹம்மத் ஸாபிர் – குருநாகல், கொல்லந்தழுவ “உஸ்மானிய்யா” அரபுக் கலாபீட மாணவரும், மூன்றாம் இடத்தை அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஸப்ரி – காலி, கட்டுகொடை, “அல் – மத்ரஸதுல் பாரி” அரபுக் கலாபீட மாணவரும் பெற்று, தமது பெற்றோர்கள், தமது ஆசான்கள் உள்ளிட்ட இலங்கைத் தாய் திரு நாட்டிற்கும் பேரும் புகழும் பெருமையும் சேர்த்துள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *