உள்நாடு

தலாத்துஓய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கண்டி தலாத்துஒய பிரதேச பாடசாலைகளின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர் மாணவியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ARI நிறுவன அனுசரனையில் அதன் பணிப்பானர் எம். ரிக்காஸின் ஏற்பாட்டில்  உடுதெனிய ஹாசா மண்டபத்தில்  கடந்த  01 ந்திகதியன்று நடைபெற்றது

இதன்போது கல்விப் பணிப்பாளர் ஜெமீல், மாரஸ்ஸன இலங்கை வங்கிக் கிளை முகாமையாளர் நிவா நந்தி, தலாதுஒய பொலிஸ் அதிகாரி சாஜன் மகிந்த அமரவீர, உடுதெனிய மஸ்ஜித் தலைவர் சாஜஹான் தெல்தொட்ட முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் மாரஸ்ஸன தமிழ் வித்தியாலய அதிபர்களான எம்.அஸ்லம் , எஸ். பாலகுமார் உட்பட மேலும் பிரதேச முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்  நலன்விரும்பிகள் எனப் பலரும் கலத்துகொண்ட இந்நிகழ்வில் ARI நிருவன பணிப்பாளர் உட்பட கலந்துகொண்டவர்கள் மாணவர் மாணவியர்களுக்கு ஒரு வருடத்துக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததுடன் இநுநிகழ்வில் பணிப்பாளர் தெரிவிக்கையில் : 

தமது நிறுவனத்தின்மூலம் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு கணினி யந்திரங்கள் பெற்றுக்கொடுத்துள்ளமை  கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கியுள்ளமை பெண்களின் சுய தொழில் வாய்ப்புகளுக்கு உதவியுள்ளமை அத்துடன் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மாதாந்த உதவிநிதிவசதிகள் என்பன செய்துகொடுத்துள்ளதாகவும் எதிர்காலங்களிலும் இதுபோன்ற உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *