உள்நாடு

தர்ம சக்தி அமைப்பினருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பு

தர்ம சக்தி அமைப்பின் தலைவர் கலாநிதி மாதம்பஹம அஸ்ஸஜி தேரர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சினேகபூர்வ விஜயமென்றை (07) இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவது தொடர்பான பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தர்ம சக்தி அமைப்பும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் தர்ம சக்தி அமைப்பின் நிறைவேற்று செயலாளர் பாதிரியார் அநுர பெரேரா, உதவிச் செயலாளர் சிவ ஸ்ரீ சிவ தர்சக சர்மா குருக்கள், பொருளாளர் அஷ்ஷெய்க் ஏ.என்.எம். பிர்தௌஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரிஸான் ஹுஸைன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான சுல்கிப் மௌலானா, அஸாம் லத்தீப் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட், வக்ப் நியாய சபை செயலாளர் (பதில்) எம்.என்.எம். ரோஸன், திணைக்கள சகவாழ்வு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எம்.றிஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *