வட மத்தியின் 11ம் தர பரீட்சைகள் ஜனவரி 27 முதல் நடாத்தப்படும்.
வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர இறுதிப் பரீட்சையின் அனைத்துப் பாடங்களும் ஜனவரி 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்தப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
வினாத்தாள்கள் கசிவு காரணமாக கடந்த (06) தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சிங்கள இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலப் பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
இதனிடையே வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 6ம் மற்றும் 7 ம் தரங்களின் வினாத்தாள்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிட்ட ஆசிரியரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆறாம் தரம் தொடர்பான புவியியல் வினாத்தாள்களின் விடையத்தாள்கள் வெளியிட்டுள்ளதாக ஒன்றியத்தின் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் அசேல விஜேசிங்க தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)