பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் புத்தளம் ஜெம்மிய்யா அலுவலகத்திற்கு வருகை
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களின் வேண்டுகொளுக்கு இணங்க புத்தளம் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஜே.எம். பைசல் அவர்கள் ஜம்இய்யாவின் காரியாலயத்திற்கு 04.01.2025 சனிக்கிழமை வருகைத் தந்தார்.
சுமுகமான கலந்துரையாடலின்பின்பு அவரிடம் ஜம்இய்யாவின் உறுப்பினர்கள் சில விடயங்களை வேண்டிக் கொண்டனர்.
- புத்தளத்துக்கான காழியாரின் தேவைப்பாடு.
- தள வைத்தியசாலையின் மேம்பாடு.
- தள வைத்தியசாலையில் காணப்படும் நாய்களை அகற்றுதல்.
- திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தின் தேவைப்பாடு.
- புதிய தொழினுட்ப கல்லூரியின் தேவைப்பாடு.
- வடிகான் அமைப்பின் தேவைப்பாடு.
ஜம்இய்யாவின் உறுப்பினர்களால் பொன்னாடைப் போர்த்தியும் நினைவு சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். அத்துடன் விருந்துபச்சாரமும் நடந்தது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா
புத்தளம்
நகரக் கிளை