நான்கு மில்லியனுக்கும் அதிக பெறுமதிமிக்க பூச்சி கொள்ளிகள், களை நாசினிகளை கைப்பற்றிய அதிகாரிகள்
இரகசியமான முறையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு மில்லியனுக்கும் அதிகமான பெறுமதிமிக்க பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைநாசினிகளை கல்கிரியாகம புப்போகம பகுதியில் (07) கைப்பற்றியுள்ளதாக வடமத்திய மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.
நீண்ட காலமாக உள்ளூர் நிறுவனங்களின் வர்த்தக நாமங்களுடன் போதியிடப்பட்டு கல்கிரியாகம புப்போகம பகுதியில் மிக உயர்ந்த மட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
பேராதனை பூச்சிக்கொல்லி பணியகம் மற்றும் வடமத்திய மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளும் இணைந்து குறித்த களஞ்சியசாலையை ஆய்வு செய்த போது இதனை கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் குறித்த களஞ்சியசாலையை சோதனையிட்ட போது உள்ளூர் வர்த்தக நிறுவனங்களின் பிரிண்டிங் பேப்பர் நிரம்பிய பெட்டிகள் ஏராளமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தலை மேற்கொண்ட களஞ்சியசாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் .அவரை கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லி விதிகளின்படி (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பிரதி பணிப்பாளர் அலுவலக விவசாய ஆலோசகர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)