சமூக வலுவூட்டல் வேலைத் திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு.
பிரஜைகளை வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்தி
அபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற் படி வேலைத்திட்டம் நடைபெறுகிறது.
அதற்கமைவாக 2025.01.08 ம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் அவர்களின் பங்குபற்றலுடன் தலைமைப்பீட முகாமையாளர் அஷ்ஷேஹ் எம்.ஜே.எம்.நிஹ்மதுள்ளா அவர்களின் தலைமையில் திட்ட முகாமையாளர் என்.ரி.மசூர் மற்றும் அவர்களின் திட்ட உதவியாளர் முஹாஜிர் ஆகியோரின்நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இதில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஸட்.அப்துர் றகுமான் கலந்து கொண்டு விரிவுரை நடாத்தினர்.
(ஒலுவில் விசேட செய்தியாளர்)