கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷனின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கற்பிட்டி பிரதேசத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் மஹ்தி பவுண்டேஷன் கல்வி சார் வேலைத்திட்டத்தின் ஊடாக வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாவது நிகழ்வு கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ.ஆர்.எம் பங்களாவில் செவ்வாய்க்கிழமை (07) மஹ்தி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் அதிபரும் மஹ்தி பவுண்டேஷனின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எம் அருஸ் மற்றும் கற்பிட்டி ஐயூப் பாடசாலையின் ஆசிரியரும் மஹ்தி பவுண்டேஷனின் இணைப்புச் செயலாளருமான எம் நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷன் கல்வி சார் வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாவது நிகழ்வில் கற்பிட்டி புதுக்குடியிருப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் ஏனைய கிராமங்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்னும் ஓர் இரு நாட்களில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்து உரை நிகழ்த்திய மஹ்தி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் கற்பிட்டி பிரதேசத்தின் சிறப்பு பற்றியும் கல்வி நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு மற்றும் கஷ்டங்கள் வறுமை நிலை பற்றி தானும் தனது குடும்பமும் அனுபவித்த நிலை அந்த நிலையிலும் தம்மை கல்வியில் வெற்றியடை செய்து தனது குடும்பத்தில் மூன்று பட்டதாரிகளை உருவாக்கிய தனது பெற்றோர்களை நினைவு கூர்ந்து உரையாற்றியமை சகலரயும் சிந்திக்கவைத்தமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)