உள்நாடு

ஊடகத்துறை விருது வழங்கும் விழாவில் ஐவருக்கு வாழ்நாள் தங்க விருது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் ஊடகத்துறை விருது வழங்கும் விழா நேற்று கல்கிசை பீச் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந் நிறுவனங்களின் இணைத் தலைவர்களான குமார் நடேசன்,சிறி ரணசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு முன்னாள் பேராசிரியர் சாவித்ரி குணசேகர அதிதியாக கலந்து கொண்டார்.
இம்முறை பத்திரிகைத்துறையில் சிரேஷ்ட 5 பத்திரிகையாளர்களுக்கு வாழ்நாள் சாதனை தங்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சந்திரிக்கா விஜேசுந்தர, என்.எம்.அமீன், பெனாட் ரூபசிங்க, ஜெனிட்டா கரீம், மற்றும் யோகமுத்தி , ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் விருதுகள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களின் வழங்கி வைக்கப்பட்டன.


மேலும் இலங்கையில் வெளிவரும் மும்மொழி பத்திரிகைகளிலும் இந்த ஆண்டின் சிறந்த ஊடகவியளாளர்கள் மேர்வின் சில்வா விருது. உபாலி விஜயவர்த்தன விருது சுப்பிரமணிய செட்டியார் விருது, பேராசிரியர் கைலாசபதி விருது. டி.ஆர்.விஜயவர்த்தன விருது என 20 துறைகளில் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன
சிறந்த புலனாய்வு செய்தியாளர், விறுவிறுப்பான செய்தி விருது, சிறந்த சுகாதார விருது, சிறந்த விளையாட்டு செய்தி விருது, வடிவமைப்பாளர் விருது, சிறந்த கார்டூன் கேளிச் சித்திரம், சிறந்த புகைப்படப்பிடிப்பாளர் சிறந்த இணையதள செய்தி விருது, சிறந்த காணொளி ஆக்கம் சிறந்த பந்தி எழுத்தாளர், சிறந்த வணிகவியல் விருது.
தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தமிழன், விடிவெள்ளி ,தினக்குரல், தமிழ் மிரர் போன்ற பத்திரிகைகள் சிறந்த ஆக்கங்களை சமர்ப்பித்த அவர்களுல் விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *