விளையாட்டு

வெலம்பொட இம்தியாஸ் “South Asian Meet” போட்டியில் பங்கு பற்றுவதற்காக இன்று இந்தியா பயணம்

வெலம்பொடயைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் மொஹம்மத் இம்தியாஸ் “South Asian Meet” போட்டியில் பங்கு பற்றுவதற்காக, இன்று (2025 01.07) இந்தியாவுக்கு பயணமாகிறார்.

சிறு வயது முதல் விளையாட்டுத் துறைகளில் மிகுந்த ஆர்வம் காட்டும் இம்தியாஸ், மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது, சர்வதேச போட்டிகளிலும் ஏற்கனவே பங்கு பற்றி பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இவர், வெலம்பொட “சன் ஷைன்” விலையாட்டுக் கழகத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *