வலம்புரி கவிதா வட்டத்தின் 107 ஆவது கவியரங்கு
வலம்புரி கவிதா வட்டத்தின் 107 ஆவது கவியரங்கம் இம்மாதம் 13 ஆம் திகதி (13/01/2025) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய தமிழ் கணித பாட ஆசிரியர் கவிஞர் மினுவங்கொட ஏ. சிவகுமார் தலைமையில் கவியரங்கு நடைபெறும். ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி முன்னிலை வகிப்பார். கவியரங்க ஏற்பாடுகளை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.