மறு அறிவித்தல் வரை பரீட்சைகள் ஒத்திவைப்பு
வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமத்திய மாகாண கல்விச் செயலாளரின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்கான 11 ஆம் தரத்திற்கான இறுதித்தவணை பரீட்சையை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தரம் 06 முதல் 10 வரையான பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் வெளியாகியுள்ளதனாலேயே குறித்த பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமேர்வன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)