நேபாளத்தின் சக்தி வாய்ந்த நில அதிர்வு
நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.