கோஷங்களுக்கு சுருங்கிப்போகாது புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயல்படுவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை
மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, இந்த உயரிய பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும். வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், சபாநாயகர் தலைமையிலான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், செயலாளர் நாயகம் தலைமையிலான அனைத்து பாராளுமன்ற ஊழியர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய ஒரு வருடமாக அமைய வாழ்த்துகள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.