J.M.J media வின் மரக்கன்றுகள் நடுகைத் திட்டம்
J.M.J media சமூகத்திற்கு தேவையான பல விடயங்களை செய்து வருகின்ற இந்நிலையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வெகு சிறப்பாக செய்து ஜனவரி மாதம் முதல் வாரத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்தது.
J.M.J media இன் நிறுவன பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு “இயற்கையை காக்க வேண்டும்” என்ற நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இலங்கை, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் , சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா, கத்தார், குவைத் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள J.M.J media இன் ஒருங்கினைப்பாளர்கள் மூலம் சிறப்பாக இந்த மரம் நடுகைத் திட்ட நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டத்தோடு இதில் அதிகமான நாளைய தலைவர்களாக வர்ணிக்கப்படும் சிறுவர்கள் கலந்து கொண்டமை இத் திட்டத்தின் வெற்றியும் சிறப்பம்சமுமாகும்.