உள்நாடு

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்.சந்தேக நபர்கள் இருவர் கைது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை மிஹிந்தலை பொலிஸார் (06) கைது செய்துள்ளனர்.

மிஹிந்தலை நகரை வசிப்பிடமாக் கொண்ட 27 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு வேளியே இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் கடந்த (05) இரவு பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவில் இடம்பெற்ற வருட இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது தாக்குதல் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *