முச்சக்கர வண்டி பஸ் விபத்தில் சிறுமி பலி.
இராஞாங்கனை பொலிஸ் பகுதியில் அனுராதபுரம் புத்தளம் பிரதான வீதியில் (05) இரவு முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 12 வயதான சிறுமி யொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி வீதியில் சென்று கொண்டிருந்த நாயொன்றுடன் மோதவிருந்த நிலையில் அதனை தடுப்பதற்கு முற்பட்ட வேளை வீதியில் குடை சாய்ந்து இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் பஸ்ஸுடன் மோதி விபத்திற்கு உள்ளான நிலையில் காயமடைந்த சிறுமி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஞாங்கனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)