தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் அனுராதபுர அலுவலகம் திறப்பு
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்துடன் இணைந்து அனுராதபுரம் மாவட்ட அலுவலகம் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் கடந்த (04) திறந்து வைக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், “தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் என்பது ஒரு குறிக்கோளுடன் முன்வைக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் பல நோக்கங்களுடன் முன்வைக்கப்படும் முக்கியமான வேலைத்திட்டம்” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாதாள உலக கும்பலை ஒடுக்குதல் , போதைப்பொருள் ஒழிப்பு, அரச சேவையில் ஊழல் மற்றும் முறைகேடுகளை நிறுத்துதல் நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது போன்ற பல விடையங்கள் தொடர்பான வேலைத்திட்டமாகும்.
வடக்கு மாகாணத்தை மையமாக கொண்டு பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தி தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்து வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் புத்திக் சிறிவர்தன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.பீ.ரீ.சுகதபால உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப்-அநுராதபுரம்)