திருகோணமலையில் இடம்பெற்ற Sri Lanka Pen Club இன் 4ஆவது தேசிய மாநாடு
ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பு நடாத்தும் முஸ்லிம் பெண்கள் ஆளுமைகளின் நான்காவது தேசிய மாநாடானது, “குடும்ப கட்டமைப்பை பேணுபவளே ஆற்றலுள்ள ஆளுமைப் பெண்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் திருகோணமலை ஜுபிலி மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (05) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இலக்கிய வித்தகரும் அமைப்பின் தலைவியுமான சம்மாந்துறை மஷுறா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான ஜனாப் M.M.நஸீர், முதலமைச்சின் செயலாளரான ஜனாப் Z.A.M பைஸால் ஆகியோர் கலந்துகொண்டதுடன்.
விஷேட அதிதியாக கிழக்கு மாகாணத்தின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவனீதன், சிறப்பு அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைச் சேர்ந்த ஜனாப் A.F.M அஸ்ரப், பொறியியலாளர் நம்மட முற்றம் ஆசிரியரான திரு. கதிர் திருச் செல்வம், கௌரவ அதிதிகளான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரான A.L தௌபீக், திருகோணமலை ஸாஹிராக் கல்லுரியின் அதிபர் ஜனாப் M.M.M. முஹைஸ் மற்றும் திருகோணமலை குரு முதல்வர், பணிப்பாளரான அருட்தந்தை Dr.P. போல் ரெபின்ஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
“பெண்ணெனும் பேராறு” என்ற தலைப்பில் சிறந்த கவியரங்கு நிகழ்வும் அவரி சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் உறுப்பினர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
(எம்.பஹத் ஜுனைட்)