காலியில் இடம்பெற்ற பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் பொதுச் சபை கூட்டம்
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான பிரதிநிதிகளின் பொதுச்சபை குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) காலியில் பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் திட்ட பணிப்பாளர் லவினா ஹசந்தினி தேசிய திட்ட இணைப்பாளர் எப். ராஜன், கள முகாமையாளர் அன்டன் வனத்தையா மற்றும் மாவட்ட இணைப்பாளர்களான ஏ.ஜெஸ்மன் , கே.யோகசுஜி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தினர்
நிகழ்வில் பல துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலையக சமூகங்கள் எதிர்நோக்கும் காணி, வீடு மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன் அமைப்பின் எதிர்காலத்திற்கான செயற்பாடுகளை இனங்கண்டு மலையக மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் பொதுச் சபைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)