உள்நாடு

பிரதியமைச்சர் முனீர் முழப்பரிடம் கையளிக்கப்பட்ட கொழும்பு டைம்ஸின் கலண்டர் முதற் பிரதி

கொழும்பு டைம்ஸ் இணையதள ஊடகத்தின் புத்தாண்டுக்கான colombo Times 2025 wall caledar முதற் பிரதி தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முனீர் முளப்பருக்கு கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் முஹம்மத் ரஸூல்தீன் கையளித்து வைத்தார்.


மெக்ஸன் குழுமிய (Macksons Group) முகாமைத்துவப் பணிப்பாளர் மிஸ்வர் மக்கீன்,உப தலைவர் தில்ருக்ஷி டீ சில்வா மற்றும் இளம் முஸ்லிம் பெண்கள் சங்க தலைவி பவாஸா தாஹா மற்றும் வர்த்தகதுறைசார் பிரமுகர்களுக்கும் இந்த நாட்காட்டியின் சிறப்பு பிரதிகள் பிரதம ஆசிரியரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள ஊடகத்தின் வாசகர்களுக்கும் நான்காண்டுகால டிஜிட்டல் பதிப்பின் ஆதரவாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்துடன் ஐந்தாண்டு நிறைவு விமரிசையான நிகழ்வுக்கு பூர்வாங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *