உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணப்பொதி வழங்கும் வைபவம் – 2025

பாத்த ஹேவா ஹெட்ட பிரதேச பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணப் பொதி ARI நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் உடுதெனிய ஹாஷா ரிசப்ஷன் மண்டபத்தில் 01.01.2025ஆம் ஆண்டு காலை 10.30 மணியளவில் ARI நிறுவனத்தின் நிறைவேற்று முகாமையாளர் ரிக்காஸ் மரிக்கார் தலைமையின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் வைபவத்திற்கு கண்டி கல்வி வலய காரியாலயத்தின் ஜெமீல் , தீபா விஜயசிங்க , எலன் , இலங்கை வங்கியின் (BOC) மாரஸ்ஸன கிளை முகாமையாளர் நுவாந்தி , நிஹாரா ஆசிரியர், நிலாப்தீன்(திருமதி. சல்மா ஆசிரியரின் கணவர் ) , கண்டி தலாது ஓயா பொலிஸ் பொறுப்பாளருக்கு பதிலாக சாஜன் மஹிந்த அமரவீர , OM Traders உரிமையாளர் திரு. ராஸிக் (சமாதான நீதவான்) , ஜாமிஉல் அல்ஹர் ஜூம்மா மஸ்ஜித் நிர்வாகி தலைவர் அல்ஹாஜ் ஷாஜஹான் , முன்னாள் நிர்வாக தலைவரான அப்ஸால் கிரீன்டின் மில் உரிமையாளர் அல்ஹாஜ் மஸூத் மரிக்கார், பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் ஆகிர் மரிக்கார் கலந்துக் கொண்டனர்.

மேலும் தெல்தொட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி அதிபர் அஸ்லம் , அல்-அக்பர் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் நஸ்மின் , மாரஸ்ஸன தமிழ் வித்தியாலய அதிபர் பாலகுமார், பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் வருகை தந்தனர்.
வரவேற்பு உரையின் போது ARI நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ரிக்காஸ் மரிக்கார் தனது நிறுவனத்தின் ஊடாக பல பாடசாலைக்களுக்கு கணினி வழங்கிய விடயத்தையும் தெல்தோட்டை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தியமை பற்றியும் , பல்கலைக்கழகம் சென்றுள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் பற்றியும் , பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு திட்டம் பற்றியும் மிகத்தெளிவாக தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி தமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் பற்றியும், அதனால் அவரில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும், எதிர்காலத்தில் ஆசிரியரை கௌரவிக்கவும், தமது ஆசிரியரை தாய் போல் பாதுகாப்பது பற்றியும் கூறினார். மேலும் இவரின் ஆசிரியர் மூலமாக தாம் இன்று இவ்வாறான ஒரு நல்ல நிலையில் இருப்பதாகக் கூறி தமது ஆசிரியர்களை கௌரவித்தார்.


உடுதெனிய ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்மா மஸ்ஜிதின் பிரதம இமாம் அல் ஹாபீஸ் மௌலவி ரிபாஸ் விஷேட துவா பிரார்த்தனையாற்றினார். எதிர்காலத்திலும் ARI நிறுவனத்தின் கல்வி சம்மந்தமான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைபெறும் என அதன் முகாமையாளர் குறிப்பிட்டார். திருமதி. சாந்தனியின் நன்றியுரையுடன் வைபவம் இனிதே நிறைவுற்றது.

ARI நிறுவனத்தின் உரிமையாளர்
M.M.M. ரிக்காஸ் மரிக்கார்

Photo 01
உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ARI நிறுவன உரிமையாளரின் கையினால் பெறுகிறார்.

Photo 02
மாரஸ்ஸன தமிழ் வித்தியாலய மாணவனின் பெற்றோர் தனது பொதியை எனசல்கொல்ல பாடசாலை ஆசிரியர் M.A.M. ரியாஸ் அவர்களின் கையாள் பெறுகிறார்.

Photo 03
பல்லேகம அல் ஹுஸ்னா பாடசாலை மாணவி தனது பொதியை ARI உரிமையாளர் M.A.M. ரியாஸ் ஆசிரியரின் கையில் பெறுகிறார்.

Photo 04
ARI நிறுவனத்தின் உரிமையாளர் M.M.ரிகாஸ் மரிக்கார் அவர்களின் அனுபவ பகிர்வு வரவேற்பு உரை.

எஸ்.ஏ.எம். பவாஸ்
தகவல் அதிகாரி
அரசாங்க தகவல் திணைக்களம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *