வருடமொன்றுக்கு மூன்று இலட்சம் நாய்க் கடி சம்பவங்கள் பதிவு
வருடமொன்றுக்கு சுமார் மூன்று இலட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாக, பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர் நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக, பொது சுகாதார கால்நடை வைத்திய சேவையின் வைத்திய அதிகாரி டாக்டர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.
இதில் 11 பேர் விசர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நடுத்தர வயதுடையவர்களில் அதிகமானோர் விலங்குக் கடிகளுக்கு உள்ளாவதாகவும், அவர்களில் இரண்டு பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், குரங்குக்கடி அதிகரித்துள்ளது.
இது தவிர, மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக, வருடாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக, வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )