களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனை ஆரம்பம்
களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனை களுத்துறை மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைசரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பணிமனை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சரின் தலைமையில் ஆரவாரங்களின்றி இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் ஜனக குணவர்தன உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)