கற்பிட்டி மணல்தோட்டம் பாத்திமா செய்னப் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்
கற்பிட்டி மணல்தோட்டம் பாத்திமா செய்னப் பாலர் பாடசாலையின் 12 வது வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் வெள்ளிக்கிழமை (03) பாடசாலையின் வளாகத்தில் பாத்திமா செய்னப் பாலர் பாடசாலை மற்றும் செய்னப் பெண்கள் மதுரஸாவின் தலைவர் எஸ்.எம் றியாஸ் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலக பாலர் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரி எச்.எம் நிப்ராஸ், வன்னிமுந்தல் கிராம உத்தியோகத்தர் ஜே. இஸட். எப் சஹீனா, கற்பிட்டி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தரும் செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான ஏ.ஆர் முனாஸ், தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ் மற்றும் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எஸ்.டி.எம் சுகைப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறார்களின் கலை ஆற்றல்களையும் ,ஆளுமைகளையும் வெளிக்கொணரும் நோக்கோடு இடம்பெற்ற மேற்படி கலை நிகழ்விற்கு பெற்றோர்கள் தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கியதுடன் பாத்திமா செய்னப் பாலர் பாடசாலையின் ஆசிரியர்களான எம்.ஆர்.எப் சிப்கா, எஸ் இஷ்ரத் ஆகியோர் இந்த சிறார்களை சிறப்பாக தயார்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்- றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)