அனுராதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஆளுனரால் பலா செடிகள் வழங்கி வைப்பு.
அனுராதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச பலா செடிகளை வழங்க வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் கீழ் அனுராதபுரம் மொரகொட மற்றும் ஹேனபொலயகம பிரதேசத்தில் வசித்து வரும் 400 விவசாயிகளுக்கு பலாச் செடிகள் ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதயுதவியை அமேரிக்காவில் வசித்து வரும் கலாநிதி விஜேசிறி அமரசிங்க மற்றும் மஞ்சுள கொடித்துவக்கு ஆகியோரினால் வழங்கப்பட்டுள்ளது.
மஹாஇலுப்பல்லம் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறந்த வகை பலாச் செடிகளே இங்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)