“காலங்கள் பேசும் காவியங்கள்” கவிதைகள் தொகுப்பு நூலுக்கு பெரும் பாராட்டு
“காலங்கள் பேசும் காவியங்கள்” என்னும் 11000 கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூல், தற்போது சென்னை – கன்னிமாரா நூலகப் புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கவிதைத் தொகுப்பு நூலை, இந்திய திரைப்பட நடிகை எம்.எஸ். ரேகா, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் “குமுதம், விகடன்” ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் குழுவினர்களும் பார்வையிட்டு, இந்நூலைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
“கவிதைக்களம் – கவிபாவை குழுமம்” சார்பாக, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்நூலின் தொகுப்பு ஆசிரியர் “கலைமாமணி” கவிபாவை கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )