உள்நாடு

காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தில்2025ம் ஆண்டிற்கான அரச பாடசாலைக் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

“கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)”தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து 2025 ஆம் வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பித்தல் மற்றும் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு வியாழக்கிழமை (02) மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.ஐ.யஸீர் அறபாத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

“க்ளீன் ஸ்ரீ லங்கா” என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும்.

இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.

என்ற அடிப்படையிலும் பாடசாலையில் ஆசிரியர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை சிறப்புற நடைமுறைப்படுத்தல் மாணவர்களின் கடமைகள் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் ஆசிரியர் சத்திய பிரமாணம் மற்றும் மாணவர் சத்திய பிரமாணம் என்பன இடம் பெற்றன.

அதனைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர் எஸ்.ஐ.யஸீர் அறபாத் புதுவருடம் தொடர்பாக சிறப்புரை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் எமது பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான முக்கிய சில பதவிகளுக்கான புதிய நியமனங்களும் அதிபரால் ஆசிரியைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலையின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *