ஹஜ் தொடர்பான சட்டத்தினை உருவாக்க நடவடிக்கை; ஹஜ் குழுத் தலைவர் பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹிலார்
புனித ஹஜ் விவகாரங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், மோசடிகள், குறைபாடுகள் உட்பட பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு ஹஜ்ஜுக்கான சட்டமொன்றினை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை புதிய ஹஜ் குழு முன்னெடுக்குமென பிரபல பட்டயக் கணக்காளரும் ஹஜ் குழுவின் புதிய தலைவருமான ரியாஸ் மிஹிலார் தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் குழு உறுப்பினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது ஹஜ் முகவர்களுக்கு புதிய ஹஜ் குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஹஜ் குழுத் தலைவர், புனிதமான ஹஜ் கடமையை ஹாஜிகள் சீராகவும்,சிறப்பாகவும் செய்வதற்கான சகல வசதிகளையும் முகவர்கள் செய்து கொடுக்க வேண்டும்.அதன் பொருட்டு ஹஜ் குழு முன்னெடுக்கும சகல நடவடிக்கைகளுக்கும் முகவர்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.