பேருவளை பாஸியதுல் நஸ்ரியாவில் புதிய மாடிக் கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு
பேருவளை மருதானை யாஸிர் அரபாத் மாவத்தையில் உள்ள அல்-பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையில் மர்ஹும் அல்-ஹாஜ் நாஸிம் பாச்சா மரிக்கார், மர்ஹூமா ஹாஜியானி ஸித்தி ஹதீஜா ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவர்களது பிள்ளைகளினால் பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா 2ஆம் திகதி வியாழக்கிழமை (2025-01-02) நடை பெற்றது.
பேருவளை நகரசபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான அல்-ஹாஜ் அரூஸ் அஸாத், பிரபல சமூக சேவையாளர்களான, அல்-ஹாஜ் தஸ்தகீர் பாச்சா, முஹம்மத் பலூல் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் மர்ஹூம் நாஸிம் பாச்சா மரிக்கார் தம்பதிகளின் புதல்வர்களால் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிபர் திருமதி யஹ்யா ஹுதைர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மர்ஹும் நாஸிம் பாச்சா மரிக்கார் தம்பதிகளின் பிள்ளைகள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
விழாவுக்கு வருகை தந்த பிரமுகர்களை அதிபர் யஹ்யா ஹுதைர் பாடசாலை, அபிவிருத்திச் சங்க செயலாளர் இஸ்மத் அஹமத், உறுப்பினர்களான முஹம்மத் அரபாத், முஹம்மத் இம்ரான், அலி சப்ரி உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய விஷேட அதிதிகளில் ஒருவரான் றிஸ்னா ஷாபி உரையாற்றும் போது கூறியதாவது,
பள்ளிவாசலும், பாடசாலையும் இரு கண்கள் போன்றது. அந்த வகையில் இன்று கல்விக் கண்களை திறப்பது போன்று பாரிய இடப் பற்றாக்குறையாக இருந்த இப் பாடசாலைக்கு நான்கு மாடி கட்டடங்களை அமைக்க எமது குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் முன்வந்தமை வரலாற்று நிகழ்வாகும்.
அதே போன்று, சுமார் 100 வருடங்களுக்கு முன்பு அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற மூட கொள்கையோடு இருந்த சமூகத்துக்கு எமது பாட்டனாரான எச்.எம் ஸைனுலாப்தீன் என்பவரோடு 8 பேர் அறிந்த குழுவொன்றினாலேயே இப்பகுதியில் அல்-பாஸியத்துல் நஸ்ரியா என்ற பெண்கள் பாடசாலை தோற்றம் பெற்றமை மற்றொடு மைக் கல் ஆகும்.
இந்த பாச்சா பரம்பரையில் வந்தவர்களாலேயே இக்கல்விப்பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்றார்.
அதிபர் யஹ்யா ஹுதைர் தலைமை உரையில் கூறியதாவது,
இப் பாடசாலை வரலாற்றில் இன்னொரு மைக்கல்லை எட்டியதென்றே கூற வேண்டும். ஏனெனில், விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை நாளடைவில் வளர்ச்சி காணக்காண இட, வள பற்றாக்குறை ஏற்பட்டு வந்திருக்கிறது.
முன்னாள் சபாநாயகருமான எம்.ஏ பாக்கீர் மாக்கார் ஆரம்ப கட்டிடத்தௌ அமைத்துத் தந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையின் விளைவாக 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையினால் மற்றொரு கட்டிடம் தரப்பட்டது.
இப்பாடசாலை மாணவர்கள் மிகவும் பெருமைசாலிகள். அதேபோன்று 16 பேர் கொண்ட ஆசிரியர் குழாமும், பல தியாகங்களை சந்தித்து இடப் பற்றாக்குறையை சமாளிக்க காலை நேரம் மற்றும் மாலை நேரம் என இரண்டு வேளைகளும் பாடசாலை நடைபெற்ற துரதிஷ்ட நிகழ்வை மிகவும் கவலையுடன் நிகனைவு கூறுகிறேன். இவ்வாறு சிரமப்பட்டும், பலமைப்பரிசில் பரீட்சையிலும், சாதாரண தர பரீட்சையிலும் உயர்தகமைகள் பெற்ற மாணவர்கள் இங்கு உள்ளனர்.
கரந்த வருடம் 60 வீதத்தையும் தாண்டி சித்தியடைந்த வரலாறும் உண்டு. இந்நிலையில் மாணவர் தொகை மேலும் அதிகரிக்க இடப் பற்றாக்குறை தொடர்ந்து எம்மை வாட்டி வந்த போது, கொடை வள்ளல் குடும்பமான பாச்சா குடும்ப வாரிசுகள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு அருகிலுள்ள காணியை கொள்முதல் செய்ததோடு, நான்கு மாடிகள் கொண்ட வகுப்பறை கட்டிடம் அமைத்துத்தர முன் வந்தனர்.
அதில் இரண்டு மாடிகள் பூர்த்தியான நிலையிலேயே, அதில் இன்று திறப்பு விழா நடந்தேறுகிறது. அந்த வகையில், அன்னல் நபிகளாரின் “கல்விக்கு உயிர் கொடுப்போர் மரணித்த நிலையென்ற..” போதனைக்கேற்ப இவர்கள் அனைவரும் ஸதகத்துல் ஜாரியா நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர். நாமும் இவர்களுக்காக பிரார்த்திப்போம் என்றார்.
முன்னாள் நகரசபை உறுப்பினரும், முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான அல்-ஹாஜ் அரூஸ் அஸாத் கூறியதாவது,
முஸ்லிம் பெண்கள் கற்பதை நினைத்துக் கூட பார்க்காத கால கட்டத்தில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் படிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்த ஊர் பேருவளை மருதானை ஆகும்.
அதன் எதிரொலியாகவே இன்று பெண்களுக்கான கல்லூரி தோற்றம் பெற்று, அதன் நூற்றாண்டையும் அண்மையில் கொண்டாடினோம். மிக அண்மைக் காலத்திலேயே இங்கு ஆண்களுக்கான கல்லூரி உதயமானது. அதுவும் காலத்துக் காலம் பெளதீக வள பற்றாக்குறையோடு, தளபாடம் மற்றும் தேவைகளை வேண்டி நின்றதை நாம் அறிவோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் குலுக்கள் முறை மூலம் பிள்ளைகள் தேர்வு இடம் பெற்ற அவல நிலையையும் நாம் சந்தித்தோம். இவ்வாறு நெருக்கடிகளோடு பெற்றோரும், பிள்ளைகளும் எண்ணற்ற அசெளகரியங்களுக்கு உள்ளானார்கள்.
காலை-மாலை நேர வகுப்புக்கள் என்று ஆசிரி, ஆசிரியைகள் அறைகளிக்கப்பட்டன. இந்த இன்னல்களை போக்கவே இப்பாடசாலையின் பெற்றோர் என்ற வகையில் எனக்குள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பரோபகார நாஸிம் பாச்சா மரிக்கார் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு இந்த கைங்கரியம் நிறைவேற துணை நின்றேன்.
அதன் விளைவாகவே, இன்று இக்கட்டிடம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இப்பகுதி மக்களது கல்வி கண்ணும் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் நன்றியோடு ஞாபகமூட்டுகிறேன் என்றார்.
இடையில், பாடசாலை மாணவர்களின் இனிமையான கஸீதா நிகழ்சிகள் கலை கட்டின.
தொண்டர் ஆசிரியருக்கும் இட நெருக்கடி வேளையில், சிரமம் தாண்டி மாலை நேரத்தில் சமூகமளித்து கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் நன்றிக்கடனாக பாச்சா குடும்ப வாரிசுகளால் பண வவுசர் ஒன்றும் அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பேருவளை நகரசபை முன்னாள் உப தலைவர் அல்-ஹாஜ் ஹஸன் பாஸி, பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர்களான அரூஸ் அஸாத், டில்சாத் அன்வர், ஓய்வு வெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.டப்ளியு.எம் அஜ்வாத், பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார, ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஸோமரத்ன, அல்-பாஸியத்துல் நஸ்ரியா மகளிர் கல்லூரி அதிபர் மஸ்னவியா மூஸின், சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணை பொருளாளர் அல்-ஹாஜ் ஏ.இஸட்.எம் ஸவாஹிர், மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்-ஹாஜ் அதாவுல்லாஹ் அபூபக்கர், முன்னாள் மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் ஏ.ஐ.எம் அஸாத் (ஜே.பி), அப்ரார் கல்வி நிலைய தலைவர் நிஸாம் ஹாஜியார், ஸேம் ரிபாய் ஹாஜியார் அதிபர் எஸ்.ஏ குமார், சமூக சேவையாளர்களான தஸ்தகீர் பாச்சா, முஹம்மத் பலூல் உட்பட ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அபிவிருத்திச் சங்க செயலாளர் இஸ்மத் அஹமத், உறுப்பினர்களான முஹம்மத் அரபாத், முஹம்மத் இம்ரான், அலி சப்ரி என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)