களுத்துறை மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் அறிந்து கொள்வதற்கான ஆய்வு கலந்துரையாடல்
களுத்துறை மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகளில் காணப்படும் குறைபாடுகளையும் தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள போக்குவரத்துத்துறை தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான விஷேட கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மாவட்ட செயலாளர் ஜனக குணவர்தன தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் நிஹால் அபேசிங்க, சஞ்ஜீவ ரணசிங்க, ஒசானி உமயங்கா, நன்தன பத்மகுமார, சந்திம ஹெட்டியாரச்சி, தனுஷ்க ரங்கநாத் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட துறைசார் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் இந்த விஷேட கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)