உள்நாடு

கடமைகளைப் பொறுப்பேற்றார் மஞ்சுளா விதானபத்திரன

தேசிய கல்வி நிறுவகத்தின் பதினாலாவது பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன மகரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவக தலைமையக பணிமனையில் கடமை பொறுப்புக்களை ஆரம்பித்தார்.

இவருக்கான நியமனக் கடிதம் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இவர் கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் கல்வி உளவியல் சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியராவார்.


(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *