உள்நாட்டு டயர்களின் விலை குறைப்பு
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேசிய டயர்களில் விலையை குறைப்பதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்க ளின் விலையை எதிர் பார்க்கும் மட்டத்தில் குறைப்பதற்கு தேசிய டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தேசிய டயர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நுகர்வோருக்கு நிவாரண விலையில் தேவைக்கு ஏற்ப தேசிய டயர்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் நேற்று முன்தினம் தேசிய டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போதே டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் டயர் நாட்டுக்குள் இருப்பில் இருக்கும் போது நாட்டில் இருப்பிலுள்ள பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்து டயர்களை இறக் குமதி செய்வதனூடாக நாட்டில் இருப்பில் இருக் கும் டொலருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதால் தேவைக்கும் அதிகமான டயர்கள் நாட்டில் இருப்பில் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்திருக்கிறார்.
அதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு வரையறை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் வசந்த சமரசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், எதிர்காலத்தில் தேசிய டயர்களின் விலையை எதிர்பார்க்கும் மட்டத்தில் குறைப்பதற்கும் இந்த பேச்சுவார்த்தையின்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.