இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையினால் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
கலாவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாலும் மேல் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாகவும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் (01) பிற்பகல் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தில் எட்டு வான் கதவுகள் 06 அடி உயரத்திலும் இரண்டு வான் கதவுகள் 03 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் வினாடிக்கு 15600 கன அடி நீர் கலாஓயாவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)