உள்நாடு

இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் விவகார திணைக்களங்களின் புது வருட கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 புதிய வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் சகல அரச திணைக்களங்களிலும் இன்று சிறப்பாக இடம் பெற்றது.

இந்த வகையில் புத்தசாசன சமய மற்றும் சலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கத்தோலிக்க கலாசார திணைக்களம் என்பன இணைந்து மருதானையில் உள்ள அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி சமய அனுஷ்டானங்களையும் மேற்கொண்டனர்.
இதன்போது நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் மேற்கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், கத்தோலிக்க கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சத்துரி பின்டோ, இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன் உள்ளிட்ட உதவிப்பணிப்பாளர்கள், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிச் செயலகத்தினூடாக நேரடியாக ஒலி, ஒளி பரப்பப்பட்ட நேரடி ஒலிபரப்பு மூலம் புதிய வருடத்திற்கான சத்தியப் பிரமாண நிகழ்வுடன் இணைந்து அந்தந்த அலுவலங்களில் அலுவலர்கள் தமது சத்தியப் பிரமாணங்களையும் மேற்கொண்டனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *