உள்நாடு

அரகலயவை பிணக்காடாகமாற்ற நான் உடன்படவில்லை; சீருடையக் கழற்றிய சவேந்திர ஆற்றிய முக்கியமான உரை

கூட்டுப் படைகளின் தலைமை
அதிகாரியாக கடமையாற்றிய
முன்னாள் இராணுவ தளபதி
சவேந்திர சில்வா இளைப்பாறிய பின் விடை பெற்றுச் செல்லும்
நிகழ்வில் ஆற்றிய உரை அரகலய
காலத்தில் நிலவிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக அமைந்துள்ளது.

அரகலய (2022) என்னும் மக்கள் புரட்சிக்கு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று இரத்தக் கலரி ஒன்றை ஏற்படுத்த தான் உத்தரவிடவில்லை எனவும் இரத்தக் கலரி ஒன்று ஏற்படும் அளவுக்கு துப்பாக்கி சூடு நடத்த என்னால் உத்தரவு வழங்கப்பட வேண்டும் என என்மீது
அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் தான் அதற்கு உடன் படவில்லை என்ற கருத்தில் நேற்று முன்தினம் (31) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற இளைப்பாறி செல்லும் நிகழ்வின் இறுதி உரையில் இவர் மறைமுகமாக குறிப்பிட்டு இருப்பதும் அவதானிக்கத்தக்கது.

அதிகாரம் தலைக்கேறிய ஒரு
கொலை வெறியனாக கொலைகாரனாக மாற வேண்டிய தேவை தனக்கு இருக்கவில்லை எனவும் ஒரு துப்பாக்கிச் சன்னத்தைக் கூட பொதுமக்கள் மீது செலுத்த தான் உத்தரவிட வில்லை எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

ஒரு மனித படுகொலையின்
காரண கர்த்தாவாக ஆக தான்
முயற்சிக்காததால் தான் ஒரு சில
நாடுகளின் இன்றைய அழிவு நிலைக்கு செல்லாமல் எமது
நாடு இன்று பாதுகாக்கப்பட்டுள்ளது.

தாய் நாட்டுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் தீய துஷ்ட நோக்கங்கள் தனக்கு இருக்க இருக்கவில்லை எனவும் சில வெளிநாடுகளின் கைப் பொம்மையாக இருக்க விரும்பவில்லை எனவும் அயல்நாடு ஒன்றின் தூதுவனாக இருந்து செல்லப் பிள்ளையாக இருக்க விரும்பவில்லை
எனவும் அவர் தனது
உரையில் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் சில பழிச் சொற்களுக்கும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானதாகவும் இவர்
தனது உரையில் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அரகலய போராட்டத்தின் போது பொது மக்கள் மீது
துப்பாக்கிச் சூடு நடத்துமாறு இவருக்கு உத்தரவிட்ட போதிலும் சவேந்திர சில்வா அதைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அன்று இவர் மீது சுமத்தப்பட்டது

கோட்டாபய பொது மக்களால் சிறைப்படுத்தப்பட்ட அன்றைய தினத்தை வர்ணித்த
கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய
சுதீஸ்வர என்பவர் சவேந்திர
சில்வா ஜனாதிபதியை பாதுகாக்கவில்லை எனவும்
அன்று வருகை தந்திருந்த அரகலய போராட்டத்தின் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் கிறிஸ்தவ தமிழர்கள் சிறுபான்மையினர் எனவும்
இவர்கள் கோட்டாபயவை
கொலை செய்யவே வந்தார்கள் எனவும் குற்றம் சாட்டி
இருந்தமையும் சவேந்திர சில்வா
இவர்களது இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி கோட்டாபயவை பாதுகாக்க
முனையவில்லை என்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *