வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி வாவிக்கரை வீதியை உடனடியாக செப்பனிடுங்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி வேண்டுகோள்
காத்தான்குடி வாவிக்கரை வீதி கடந்த வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு சுமார் ஐந்து அடிகளுக்கு மேல் நீர் வழிந்தோடியதால் அவ்வீதி முழுமையாக சேதமடைந்திருந்தது. ஆகவே இவ்வீதியினை உடனடியாக காபட் இட்டு செப்பனிட்டு தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கைவிடுத்தார்.
நேற்று (30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இக்கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
இவ்விடயத்தை மாவட்ட அபிவிருத்திக்குழு ஆராய்ந்ததுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ரத்னலால் ஜெயசேகர மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா ஆகியோர் இவ்வீதியினை செப்பனிடுவதற்கு தேவையான நிதியினை பெற்றுகொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளருக்கு பணிப்புரைவிடுத்தனர்.
(கே.எ.ஹமீட் )