மறைந்த இந்திய பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் தெரிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச இன்றைய தினம் (31.12.2024) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மறைந்த கலாநிதி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் தனது இரங்கலை இதன்போது தெரிவித்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் கையொப்பமிட்டார்.