தாய் மகள் எரிகாயங்களுடன் உயிரிழப்பு
தலாவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட குடாவெவ பிதுங்கட பிரதேசத்தில் எரிகாயங்களுடன் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
குடாவெவ பிதுங்கட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும் 2 வயது பெண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (30) பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அயலவர்களின் உதவியுடன் தாயும் மகளும் குடா நெலுபேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மரணம் தொடர்பில் நீதிவான் விசாரணை இன்று (31) இடம்பெறவுள்ளது.
நிரோஷானி மஞ்சுளா 39 மற்றும் கிஹன்சா மற்றும் தஹம்தீ 2 வயது குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை தலாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)