சீனன்கோட்டை கென் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
பேருவளை சீனன்கோட்டை கென் சர்வதேச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பேருவளை சீக்கு விழா ஹோட்டலில் மிக விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ். முஹம்மத் இஹ்ஸான் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறார்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் மேடையேற்றபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அஷ்ஷெய்ஹ் நளீம் ரபீக் பிரதம அதிதியாகவும், ருஷ்கான் ஹிகம் (பி.எஸ்.ஸி) கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் பங்குபற்றினர்.
சீனன்கோட்டையில் பல வருட காலமாக மிக வெற்றிகரமாக இயங்கி வரும் கென் சர்வதேச ஆரம்ப பாடசாலை சிறார்களின் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை அதிதிகள் உட்பட பலரும் பெரிதும் பாராட்டினர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)