உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு பொதிகள்
உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு 12000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
உலக முஸ்லிம் லீக் நிறுவனத்தினால் கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வத்தளை மற்றும் மெகொட கொலன்னாவ பகுதியில் உள்ள சிங்கள, முஸ்லிம் , தமிழி, கிறிஸ்தவ ஆகிய பல்லின மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெல்லம்பிடியவில் இடம்பெற்றது.
ராபிதா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இம்ரான் ஜமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சவூதி அரேபியா நாட்டின் உயர் ஸ்தானிகர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதன் போது 12000 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மல்வானை, கொட்ராமுல்ல ஆகிய பிரதேசங்களிலுள்ள 8500 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர்.
(இக்பால் அலி)