அரிசி, வெற்றிலை லொறிகள் நேருக்கு நேர் மோதல்; ஐவர் காயம்
பொலன்னறுவை வெலிகந்த சிங்கபுர 30 ஆவது மைல் கல் பகுதியில் தனியார் அரிசி லொறி ஒன்றும் வெற்றிலை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வெற்றிலை லொறியில் சென்ற ஐவர் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிங்கபுர வீதியில் சாய்ந்து கிடந்த மரக்கிளை ஒன்றில் இருந்து தவிர்க்க முற்பட்ட போது அரிசி லோறியின் முன்னால் வந்த வெற்றிலை லொறியுடன் மோதியதில் இரண்டு லொறிகளும் விபத்திற்குள்ளானதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிசார் தெரிவித்தனர்.
சிங்கபுர தனியார் அரிசி ஆலையில் இருந்து அரிசியை ஏற்றிக்கொண்டு பொலன்னறுவை நோக்கி பயணித்த லொறி ஒன்று பொலன்னறுவையில் இருந்து சிங்புரவிற்கு வெற்றிலை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக வெலிகந்த பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)