வட மத்திய கலை நிகழ்ச்சியில் சாஹிரா மாணவி அம்னா இரண்டாமிடம்
வடமத்திய மாகாண கலாச்சார திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலைநிகழ்ச்சி இம்முறையும் 34 ஆவது தடவையாக கொரக்கஹவெவ மாகாண அபிவிருத்தி மற்றும் பயிற்சி அலகின் கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட தமிழ் மொழி மூல அறிவுப் போட்டியில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி யில் தரம் 9வீ பிரிவில் கல்வி பயிலும் ஏ.ஆர்.எப்.அம்னா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதாக அதிபர் ஜே.ஏ. அசாத் மொஹமட் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)