அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்து, 15000 ரூபா நிலுவையை உடன் செலுத்து; ஸ்டாலின் மீண்டும் களத்தில்
அரசாங்க ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி சம்பள உயர்வினை வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தாது விட்டால் கடுமையான தொழிற்சங்க நெருக்கடிகளை அரசாங்கம் சந்திக்க வேண்டி வரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் இக்கருத்தினை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார், அத்துடன் கடந்த ஆண்டு அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்த 10000/- கொடுப்பனவில் 5000 /- வை மட்டுமே வழங்கியதாகவும் எனவே ஜனவரி பெப்ரவரி மார்ச் மாதங்களின் நிலுவைப்பணம் 15000 ரூபாவையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.