மின்சாரம் தாக்கியதில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலி
கட்டடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்காக சீமெந்து வேலையில் ஈடுபட்டு கொடிருந்த தொழிளார்களில் 4 பேருக்கு மின்சாரம் தாக்கியதில், 3பேர் மரணமாகியதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை (29/12/2024) ஞாயிற்றுக்கிழமை புத்தளம், கல்பிட்டி வீதி மாம்புரிப் பகுதியில் கட்டடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடும் வேலையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்களே, மின்சாரம் தாக்கி பாதிப்பிற்குள்ளாகியதில் 3 ஊழியர்கள் மரணமாகியதுடன் ஒருவர்கயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மன்னார் வீதி, சோல்ட்டன் (2ம் கட்டை) ஐச் சேர்ந்த இளைஞர்களான ஜெ.ஜன்சாத், எம். சாஹுல் ஹமீத் மற்றும் புத்தளம் மன்னார் வீதி, மதீனா நகரைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையான முர்சித் ஆகியோரே மரணமாகியுள்ளனர். மரணமானவர்களின் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)