பொக்ஸிங் டே டெஸ்ட் : அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது இந்திய அணி
இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில் 184 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 2:1 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க . 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 1:1 என சமன் செய்திருந்தது. பின்னர் இடம்பெற்ற 3ஆவது போட்டி சமநிலையடைய தொடர் சமநிலையில் தொடந்தது.
இந்நிலையில் தொடரின் 4ஆவது போட்டி பொக்ஷிங் டே டெஸ்ட் ஆட்டமாக உலகப்புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஸ்டீபன் ஸ்மித் 140 ஓட்டங்களையும், லபுசங்கே , கென்ஸ்டஸ் மற்றும் கவாஸா ஆகியோர் தலா 72, 60 மற்றும் 57 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பும்ரா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு இளம் வீரரான நிடிஷ் குமார் கன்னிச் சதம் கடந்து 114 ஓட்டங்களையும், ஜாய்ஸ்வால் 82 ஓட்டங்களையும், வாசிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களையும் சேர்த்துக் கொடுக்க 369 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறி கொடுத்தது. பந்துவிச்சில் கமின்ஸ், போலன்ட் மற்றும் லியென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினர்.
தொடர்ந்து 105 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் 2ஆம் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 234 ஓட்டங்களுக்குள் சுருண்டது. துடுப்பாட்டத்தில் லபுசங்கே 70 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனால் இந்திய அணிக்கு இறுதி நாளில் 369 ஓட்டங்கள் வெற்றி அலக்காக நிர்ணயிக்கப்டதமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு அனுபவ வீரர்களான ரேஹித் (9) ராகுல் (0) , கோஹ்லி (5) ஜடேஜா (2) என விரைவாகப் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் கொடுத்தனர். ஆரம்ப இளம் வீரரான ஜாய்ஸ்வால் தனித்துப் பொராடி அரைச்சதம் கடந்து 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பான்ட் 30 ஓட்டங்களுடன் நடையைக் கட்ட, முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த நிடிஷ் குமார் டக் அவுட் ஆகி வெளியேற பின்வரிசை நிலைக்காமல் போக இந்திய அணி 155 ஓட்டங்களுக்குள் சுருண்டு போக அவுஸ்திரெலிய அணி 184 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரில் 2:1 என முன்னிலை பெற்றது. பந்துவீச்சில் கமின்ஸ் மற்றும் போலன்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக பெட் கமின்ஸ் தொரிவானார்.
(அரபாத் பஹர்தீன்)