விளையாட்டு

தேசியமட்ட ஹொக்கி போட்டிப் பிரிவில் பதுளை அல்-அதான் அணிக்கு இரண்டாமிடம்

அகில இலங்கை பாடசாலைகள் ‘ஹொக்கி’ சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய மட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான ஹொக்கி போட்டித் தொடர் மாத்தளை – அலுவிஹார பெர்னாட் மைதானத்தில் 04 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியின் போது ஜே பிரிவில் முதன் முறையாகப் போட்டியிட்டிருந்த பதுளை அல்-அதான் அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இத் தேசிய மட்டப் போட்டியில் 8 பிரிவுகளில் 56 அணிகள் போட்டியிட்டிருந்தன. இப்போட்டியில் முதல் தடவையாகப் போட்டியிட்டு, வெள்ளிப் பதக்கத்தை அல்-அதான் அணி சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அல்-அதான் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் மன்சூர் பளீல் தலைமையில் பயிற்றவிப்பாளர் எம். இர்ஷாட் வழிகாட்டலில் எம். அமானுல்லாஹ், உவைசுல் கர்னி ஆகியோர் மாணவ அணியைப் பயிற்றவித்திருந்தனர்.

அம்ஜத் ஹசன் தலைமையில் வெற்றியீட்டிய அல்-அதான் அணிக்கு அதிபர் எம்.எஸ்.எம். ஸரூக் பாடசாலை கல்விச் சமூகம் சார்பில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

(அப்துல் வாஹிட் ஏ. குத்தூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *