Sunday, August 10, 2025
Latest:
உலகம்

62 பேரை பலி கொண்ட தென் கொரிய விமான விபத்து

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவில் விமான விபத்து

தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது, இதில் 47 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

175 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் விமானம், தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்திலிருந்து பயணிகளை வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் ஜெஜு ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ஆகும். தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி வேலியில் மோதியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அவசர அதிகாரிகள் தெரிவித்தனர். காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் விமானம் தரையிறங்கும் கியரை திறக்காமல் தரையிறங்கி இறுதியில் வெடிப்பதைக் காட்டியது.

இதேவேளை, கடந்த புதன்கிழமை கஜகஸ்தானின் அக்தாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது, இதில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் J2-8243, ரஷ்யாவின் தெற்கு செச்சினியா பிராந்தியத்தில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *