உள்நாடு

1977 முதல் கைவிடப்பட்டுள்ள மிகப்பெரிய அரச அரசி ஆலைக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க கள விஜயம்.

40000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான அரிசியை சேமிக்கும் திறன்கொண்ட 22 உருளைக் கிடங்குகளைக் கொண்ட மிகப்பெரிய அரசாங்க அரிசி ஆலை களஞ்சிய வளாகத்திற்கு வர்த்தக,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க கடந்த (28) களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அரிசிக்கு தேவையான உலர் நிலையை பராமரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இந்த நெல் ஆலை சேமிப்பு வளாகம் 1977 ம் ஆண்டு முதல் கைவிடப்பட்டுள்ளது.அதனை மீண்டும் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் குழுவை கொண்டு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களுக்குள் இந்த அரிசி சேமிப்பு வளாகத்தை புனரமைப்பதற்கு தேவையான மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். நாட்டு மக்களின் தேவைக்காக கல்கமுவிலுள்ள மிகப்பெரிய அரிசி சேமிப்பக வளாகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *