வனவிலங்குகள் வேட்டையாடல்; ஒருவர் கைது
வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக நொச்சியாகம பொலிசார் தெரிவித்தனர்.
நொச்சியாகம பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிமிருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றின் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)